இலங்கை செய்திகள்

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது.

அனுமதி பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 03 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நாளை வெள்ளிக்கிழமை 12 மணிநேர மின்வெட்டு!

namathufm

ஏற்றுமதி பொருளாக மாறவுள்ள வடக்கின் பனங்கள்ளு!

Thanksha Kunarasa

பிரியந்த குமார படுகொலை; 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை

Thanksha Kunarasa

Leave a Comment