எதிர்வரும் 2 வாரங்களில் நாடளாவிய ரீதியில், அத்தியாவசிய ஔடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச துறையில் மாத்திரமின்றி ,தனியார் துறையிலும் இந்த நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அரச ஒளடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு, திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒளடத தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அதேநேரம், டொலர் பிரச்சினை காரணமாக தனியார் துறையிலும் ஒளடத தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.