இந்தியா செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவை, இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சேவையின் முதலாவது பயணம் சென்னையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி முதல் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக்கிய அம்சமாக இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள், இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் எனவும் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையையும், பயணிகள் கைவசமிருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்

Thanksha Kunarasa

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம்

Thanksha Kunarasa

கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு ? உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

namathufm

Leave a Comment