இலங்கை செய்திகள்

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் புத்தர்

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று குறித்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தனர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலகமானது (சிங்கள பிரதேச செயலகம்) வவுனியா, மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள ரயில் கடவை அருகில் அமைந்துள்ளது.

குறித்த பகுதியானது தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியாக உள்ளதுடன், குறித்த பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட அதிகளவிலான உத்தியோகத்தர்கள் தமிழ், முஸ்லிம் மக்களாகவே உள்ள நிலையில், குறித்த பிரதேச செயலக வளாகத்தில் பிரமாண்டமாக பீடம் ஒன்று அமைக்கப்பட்டு புத்தருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்று வரும் அரசின் பௌத்தமயமாக்கல் திட்டங்களுக்குப் பிரதேச செயலங்களும் உடந்தையாக செயற்படுகின்றனவா எனப் புத்துஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related posts

நாளையும் மின்வெட்டு

Thanksha Kunarasa

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் !

namathufm

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

Thanksha Kunarasa

Leave a Comment