உலகம் செய்திகள்

ரஷ்ய படையினரின் உறவுகளுக்கு புடினின் செய்தி

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியில், புடின் ‘எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் மற்றும் தோழிகள்’ என்று படையினர் தொடர்புடைய பெண்களை விளித்துள்ளார்.

‘உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்த நிலையில் முழு நாடும் அவர்களுக்காக பெருமைப்பட்டு உணர்வது போல, நீங்கள் அவர்களைப் பற்றி பெருமைப்படலாம்’என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் போர் நடவடிக்கைகளில் ரஷ்ய படையினர் கட்டாயப்படுத்தப்படுத்தி ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரஷ்ய படையினர் ரஷ்ய மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நம்பகத்தன்மையுடன் உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போதைப்பொருள் கடத்தல்காரர் காதலியால் கைதானார்

Thanksha Kunarasa

சீன அரசாங்கத்தின் திடீர் முடிவு?

Thanksha Kunarasa

மட்டக்களப்பில் கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுவன் பலி

Thanksha Kunarasa

Leave a Comment