இலங்கை செய்திகள்

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

இலங்கை ரூபாவிற்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 302.92 ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 294.06 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட மிக அதிகபட்ச கட்டணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றைய தினம் 225.20 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 229.99 டொலராக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் டொலரின் பெறுமதியை குறிப்பிட்ட பெறுமானத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய வங்கி அறிவித்திருந்தது. அதற்கமைய ஒரு அமெரிக்க டொலரின் விற்பனையை 230 ரூபாவாக பேணுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவரை காணவில்லை

Thanksha Kunarasa

ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பு: மக்கள் விருப்பு அறிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் – மக்ரோன்

namathufm

ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம்

Thanksha Kunarasa

Leave a Comment