இலங்கை செய்திகள்

செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஆற்றில் விழுந்து மாயம்

இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி, செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன், கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆற்றில் விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த, 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை காணாமல் போன சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

Thanksha Kunarasa

மின்வெட்டு காரணமாக பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை பாதிப்பு

Thanksha Kunarasa

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment