இந்தியா செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிடும் தமிழ் இளைஞர்!

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பில் இந்திய மற்றும் தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சாய்நிகேஷ் ரவிசந்திரன். இவர் கடந்த 2019 ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார்.

உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை ராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார்.

மேலும், அவர் உயரம் குறைவாக இருந்ததன் காரணமாக இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், தற்போது உக்ரைன் துணை இராணுவப்படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதும் இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில், சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் தன் மகனை எப்படியாவது மீட்டு கொடுத்து விட வேண்டும் என இந்திய அரசுக்கு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

‘நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

namathufm

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை

Thanksha Kunarasa

பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று வசதி கோரியுள்ள இலங்கை

Thanksha Kunarasa

Leave a Comment