இலங்கை செய்திகள்

யாழ் பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய  பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும், தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

Thanksha Kunarasa

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு

Thanksha Kunarasa

பயங்கரவாத தடைச்சட்ட தற்காலிக திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

Thanksha Kunarasa

Leave a Comment