இந்தியா செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயா மரண விசாரணை ஆணையத்தில் மருத்துவர் – வாக்கு மூலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு கணேஷ் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று செயல்பட தொடங்கி உள்ளது. முதல் நாளான இன்று அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

மருத்துவர் பாபு மனோகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 2016-ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க இருந்த நாளுக்கு முன்னதாக, அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத நிலை ஆகிய பிரச்னைகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில், ஜெயலலிதா பதவியேற்புக்கு முந்தைய நாள், போயஸ் தோட்டத்திற்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததாக பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.

அப்போது, ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், சிறுதாவூர் அல்லது ஊட்டிக்குச் சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்ததாகவும் மருத்துவர் பாபு மனோகர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா, ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாக அப்போலோ மருத்துவர் பாபு மனோகர், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related posts

ரஷ்ய வர்த்தகரின் சொகுசுப் படகு பிரான்ஸ் கைப்பற்றி முடக்கியது!

namathufm

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

Thanksha Kunarasa

பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

namathufm

Leave a Comment