இலங்கை செய்திகள்

மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சித் திட்டம் – ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க தலையிடுகளை மேற்கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயலாக இருக்கும் என சந்தேகம் இருந்தது. எனினும் பின்னர் நடத்திய விசாரணைகளில் அது மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சித் திட்டத்தின் அங்கம் என தெரிய வந்தது.

நான் உட்பட சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். அதனை செய்ய இலங்கை அரசு தவறியுள்ளது. இந்த தாக்குதல் நடந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் கடந்த ஆண்டு ஆரம்பித்த சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையை கண்டறிய பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முறை ஒன்றை திட்டமிட ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கர்தினால் , ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கம்போடியாவில் கேளிக்கை விடுதி தீப்பிடித்து 6 பேர் பரிதாப பலி!

namathufm

அமெரிக்காவில் 430 அடி உயர ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

Thanksha Kunarasa

பராக் ஒபாமாவுக்கு ​கொரோனா!

Thanksha Kunarasa

Leave a Comment