இந்தியா செய்திகள்

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் !

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் காணப்படுவதால் 5-வது நாளாக மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து படகுகளும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை கடற்கரை தொடர்ந்து கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது,  இதனால் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5000கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் ஆகியவை துறைமுகங்கள் மற்றும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நீடித்து வரும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலைப்பட தெரிவித்துள்ளனர், மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மயிலாடுதுறை மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் மயிலாடுதுறையில் கனமழை காரணமாக முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related posts

“ரஷ்யாவின் இலக்கில் நானும் என் குடும்பமுமே முதலிடத்தில் ! ” மேற்குலகின் மெதுவான நகர்வு: உக்ரைன் அதிபருக்கு ஏமாற்றம்.

namathufm

மக்கள் விரும்பினால் தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி

Thanksha Kunarasa

இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானித்து வருகின்றேன் – நியுசிலாந்து பிரதமர்

namathufm

Leave a Comment