இலங்கையின் மாகாணங்களை உள்ளடக்கி இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுதந்திரக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிலையில் வடமாகாண அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றினர்.
குறித்த வெற்றியை, மாலைதீவில் மரணமடைந்த தேசிய உதைபந்தாட்ட அணி வீரரும் மன்னார் மாவட்ட வீரருமான டக்சன் பியூஸ்லஸ்க்கு அர்ப்பணிக்கும் முகமாக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் நேற்றைய தினம் டக்சன் பியூஸ்லஸ்ஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வெற்றியையும் அர்ப்பணித்தனர்.

சுதந்திர கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்ள முதல் குறித்த போட்டியின் வெற்றி பியூஸ்லஸிற்காக அர்ப்பணிக்கப்படும் என்று வீரர்கள் தெரிவித்திருந்த நிலையில், வெற்றியின் பின்னர் நேற்றைய தினம் பயிற்றுவிப்பாளர்கள், அணித்தலைவர் உட்பட வட மாகாண கால்பந்தாட்ட அணியினர் தமது வெற்றியை மனப்பூர்வமாக அர்பணித்துள்ளனர்.
