இலங்கை செய்திகள்

கண்டி,கம்பளையில் மஹாவலி கங்கையில் மூழ்கி இருவர் மரணம் !

கம்பளை, கண்டி ஆகிய பிரதேசங்களில், மஹாவலி கங்கையில் மூழ்கி இருவர் நேற்று மரணமடைந்தனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைவாக, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவிலவத்த பிரதேசத்தில், மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

உலப்பனே பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே நீரில் மூழ்கி மரணமடைந்தார்.நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துட்டுகெமுன மாவத்தை பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி மரணமடைந்தார். பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.பிரேதப் பரிசோதனைக்காக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மகிந்தவின் அறிவிப்பு தொடர்பில் கசிந்த தகவல்

Thanksha Kunarasa

சிறிலங்கா பிரதமர் மகிந்த பாகிஸ்தானுக்கு விஜயம்

namathufm

நாளை (30.03.2022) நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

namathufm

Leave a Comment