உலகம் செய்திகள்

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே தாக்குதலை நிறுத்துவோம்’ – புதின்

யுக்ரேன் தாக்குவதை நிறுத்த வேண்டும், ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அப்போதுதான் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம், தொலைப்பேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார் என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

யுக்ரேனை வான், கடல்,நிலம் என அனைத்து வழிகளிலும் ரஷ்யா தாக்கி வருகிறது.
இதனை சிறப்பு ராணுவ நடவடிக்கை என புதின் கூறுகிறார்.

மேலும் நாட்டை நாஜிக்கள் அற்ற நாடாக மாற்ற இது தேவை என எந்த ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்டார்.

அதேபோல ரஷ்ய அதிபர் புதின், ரஸ்ய படையெடுப்பு திட்டமிட்டது போல நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஆனால், மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரஷ்ய படைகள், எதிர்ப்பார்த்தது போல முன்னேறி செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல பேச்சுவார்த்தைக்கு வந்த யுக்ரேன் பிரதிநிதிகள், மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என புதின் தெரிவித்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

Related posts

யாழில் இந்திய அரசினால் மீனவருக்கென வழங்கப்பட்ட உணவு பொதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை! சம்மேளனம் குற்றஞ்சாட்டு.

Thanksha Kunarasa

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்கு

Thanksha Kunarasa

வரலாற்றில் இல்லாதளவு மற்றுமொரு விலையும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment