ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரினையடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி, பீப்பாய் ஒன்று 130 டொலர் வரை உயர்ந்துள்ளதாக, சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய்க்கான அதிகபட்ச விலை இதுவென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் நெருக்கடியால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ,நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது.
இந்தநிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளில், எரிபொருள் விலை பாரியளவில் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.