இலங்கை செய்திகள்

இலங்கையில், நடுங்கமுவ ராசா மரணம்

இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று, தனது 69 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது.

தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது.

கண்டி ஏசல ஊர்வலத்தில், புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை தாங்கிச் செல்லும் நடுங்கமுவ ராசா என்ற யானையே உயிரிழந்துள்ளது.

இன்று காலை 5.30 மணியளவில் இந்த யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என யானையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நடுங்கமுவ ராசா என்ற யானை கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை 13 தடவைகள் தாங்கிச் சென்றுள்ளது.

நடுங்கமுவ இராசா தெய்வீகம் பொருந்திய யானையாக சிங்கள மக்களால் பார்க்கப்படுகிறது. இதன் உயிரிழப்பானது, ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவு

Thanksha Kunarasa

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

Thanksha Kunarasa

இலங்கையில் ஊழலைக் கையாள்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தொடர வேண்டும் IMF முகாமைத்துவப் பணிப்பாளர்!

namathufm

Leave a Comment