உலகம் செய்திகள்

மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு மொஸ்கோவில் நேற்று சனிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்றதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தின் ஆதரவுடன் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அத்துடன் பென்னட்டின் இராஜதந்திர முயற்சி, ஜேர்மனி மற்றும் பிரான்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும் இஸ்ரேலிய அதிகாரி கூறியுள்ளார்.

புட்டினுடனான சந்திப்பைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பென்னட் கலந்துரையாடியுள்ளார்.

மொஸ்கோ சந்திப்பின் பின்னர், பென்னட் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்சுடனான சந்திப்பிற்காக பெர்லினுக்கு செல்வதாக இஸ்ரேலிய அதிகாரி கூறியுள்ளார்.

போர்நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்யுமாறு ஸெலென்ஸ்கி, ஏற்கனவே இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உக்ரைய்ன் மீதான ரஸ்ய தாக்குதல்களை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கண்டித்தபோதும், அந்த நாட்டின் பிரதமர் பென்னட், நேரடியான விமர்சனத்தை தவிர்த்து வந்தார்.

இஸ்ரேல், கடந்த சில ஆண்டுகளில் ரஸ்யாவுடன் சிறந்த உறவை பேணி வருகிறதுசிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைத் தொடரும் வகையில் இந்த உறவு பேணப்பட்டு வருகிறது

இதற்கிடையில உக்ரைய்ன் ஜனாதிபதி , அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நேற்று கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பிரதமருக்கும், இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு!

Thanksha Kunarasa

சீனா இராணுவ சக்திக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – உலக நாடுகள் பதற்றம் !!

namathufm

ஹிஜாப் தடை உத்தரவு தொடரும் – கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

Thanksha Kunarasa

Leave a Comment