இலங்கை செய்திகள்

மக்கள் ஆணை ஊடாகவே ஆட்சியைக் கவிழ்ப்போம்- சஜித்

‘குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாடு, நேற்று பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

இந்த அரசு நாட்டைச் சீரழித்துள்ளது. தன்னால் முடியாது என்பதை செயல்கள் ஊடாக ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், உறுப்பினர்களை வளைத்துப் போட்டு, ஆட்சி மாற்றம் செய்யும் நடைமுறை எமக்குப் பொருந்தாது. ஜனநாயக வழியிலான மாற்றமே தேவை. அதற்கான வலியுறுத்தல் கொடுக்கப்படும்.

அதேவேளை, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். அவர்களைக் கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்காமல், சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். லயன் யுகத்துக்கு முழுமையாக முடிவு கட்டப்படும். நிலையான வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படும் – என்றார்.

Related posts

யாழில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது!

Thanksha Kunarasa

விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவன் நான் – மைத்திரி

Thanksha Kunarasa

GO HOME GOTA ! சுவரொட்டிகள் யாழ்.நகரின் பல இடங்களில்!!

namathufm

Leave a Comment