சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களுக்கு திருமணம் நடக்கிறதோ இல்லையோ திருமணமான ஜோடிகளுக்கு விவாகரத்து மட்டும் நடந்து வருகிறது.
அமலா பால், சமந்தா, தனுஷ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து இசையமைப்பாளர் டி இமான், 13 வருட திருமண வாழ்க்கையை கடந்த ஆண்டு டிசம்பரில் முடித்து கொண்டதாக கூறியிருந்தார்.
2008ல் மோனிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் ,இருவரும் பரஸ்பரமாக 2020ல் இருந்தே தனியாக பிரிந்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டி இமான் அவர்கள் விவாகரத்தாகி 3 மாதங்கள் ஆன நிலையில், இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த உமா என்பவரை குடும்பத்தினர் ஒப்புதலுடன் வரும் மே மாதம் திருமணம் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து இமான் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.