இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினரான தங்கவேலு நிமலன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான முத்தப்பன் என்பவரின் கீழ் பணியாற்றி இருந்தாரென காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர் உள்ளிட்ட சிலர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குறித்த காலத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

தங்கவேலு நிமலன் என்ற சந்தேகநபருக்கு எதிராக சில நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவற்றில், 2011ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, அதிசக்தி வாய்ந்த சுமார் 2 கிலோகிராம் வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக காணப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரான தங்கவேலு நிமலனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஹோட்டல் கழிவறையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

namathufm

குளிரூட்டப்பட்ட தொடருந்து கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்டது.

namathufm

யாழ்.புங்குடுதீவில் மாணவிக்கு தொல்லை கொடுத்த இரு இளைஞர்கள் கைது!

namathufm

Leave a Comment