புதின் படைகளை அரைத்து நொறுக்குவோம், புதைப்போம் என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் அலெக்ஸே அரஸ்டோவிச்.
ரஷ்ய ராணுவத்தை தாங்கள் வெற்றிகரமாகத் தடுப்பது ஒரு விபத்தோ, அதிருஷ்டமோ அல்ல.
‘நமது வெற்றி ஒரு முறையில் நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக உருவாக்கப்பட்டு தெளிவாக செயல்படுத்தப்படும் காரண-விளைவு தொடர்பு அது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப்படைகளும், பொதுமக்களும் காட்டும் எதிர்ப்பு என்பது ‘ரஷ்யப் போர் இயந்திரத்தை அரைத்துத் தள்ளிவிடும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ரஷ்ய ராணுவம் வலிமையானதல்ல. அது பெரியது. அவ்வளவே’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் ராணுவமும், தலைமையும் எப்படி இந்தப் போரைக் கையாள்கின்றன என்பதைப் பார்த்து வெளிநாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய படையெடுப்பை எதிர்கொள்வதற்குத் திட்டமிட போதிய அவகாசம் இல்லாதபோதும் இத்தகைய வெற்றியை தாங்கள் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
‘புதின் ராணுவத்தில் உள்ள 10-ல் 8 பேர் இங்கே இருக்கிறார்கள். இங்கேதான் அவர்கள் புதைக்கப்படுவார்கள்,’ என்று அவர் கூறினார்.