‘ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை; அது எங்கள் வேலையல்ல’ என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பிபிசி உலகச் செய்தியிடம் பேசிய அவர், இந்தப் போருக்கு ரஷ்ய மக்கள் தங்கள் தலைமையைப் பொறுப்பாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை யாரோ ஒருவர் படுகொலை செய்யவேண்டும் என்று கூறும் விதமாக, ட்விட்டரில் அமெரிக்க செனட் உறுப்பினர் லின்சே கிரஹாம் எழுதியது கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் பிளிங்கன்.