உலகம் செய்திகள்

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வௌியேறும் வகையில், தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் நாடு, நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் 24-ந் திகதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது

இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தும் தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாகவும், மேலும் மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

Related posts

94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா ஆரம்பம்

Thanksha Kunarasa

தலவாக்கலையில் மூதாட்டியை கொலை செய்து காதணி திருட்டு

Thanksha Kunarasa

பங்களாதேஷை சேர்ந்த பிக்கு கடத்தப்பட்டார்

Thanksha Kunarasa

Leave a Comment