இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டேஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸில் உள்ள துறைமுகங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டேஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களம் கடந்த பெரும் போகத்தை போன்று எதிர்வரும் சிறு போகத்திற்கும் பொட்டேஷ் உரத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உரத்தை அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்,ரஷ்ய – உக்ரைன் யுத்த சூழ்நிலை காரணமாக பெலாரஸ் துறைமுகங்கள் ஊடாக பொட்டேஷ் உரத்தை இறக்குமதி செய்வது தாமதமாகியுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பொட்டேஷ் உரங்கள் உட்பட ஏனைய உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மாற்று முறைகளை கையாள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

Related posts

பதவியேற்று மறுநாளே பதவியை துறந்தார் அலி சப்ரி

Thanksha Kunarasa

அமெரிக்காவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 3 பேர் பலி

Thanksha Kunarasa

இலங்கையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி.

Thanksha Kunarasa

Leave a Comment