உலகம் செய்திகள்

ஸ்வீடன் வான் பரப்பில் ரஷ்யப் போர் விமானங்கள்

ஸ்வீடன் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி நேற்று 4 ரஷ்யப் போர் விமானங்கள் தங்கள் வான் பரப்பில் நுழைந்ததாக ஸ்வீடன் ஆயுதப் படைகள் தெரிவிக்கின்றன.

நேட்டோ உறுப்பினர் அல்லாத இந்த ஸ்கான்டினேவியன் நாடு, தங்கள் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் நுழைய திங்கள்கிழமை தடை விதித்தது.

ஐரோப்பிய நாடுகள் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து ஸ்வீடனும் இத்தகைய தடையைப் பிறப்பித்தது.

குறிப்பிட்ட அத்துமீறலை கண்டித்து ஸ்வீடன் ராணுவம் அறிக்கை வெளியிட்டது.

இது தொழில்முறையற்ற வேலை, பொறுப்பற்ற செயல்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பால்டிக் கடலில் நடந்ததாக கூறப்படும் இந்த அத்துமீறல் சிறுது நேரமே நீடித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ்

Thanksha Kunarasa

தஞ்சமடையும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து

Thanksha Kunarasa

லிட்ரோ நிறுவனம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment