உலகம் செய்திகள்

ரஷ்ய வர்த்தகரின் சொகுசுப் படகு பிரான்ஸ் கைப்பற்றி முடக்கியது!

ரஷ்யாவின் செல்வந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான சொகுசுப் படகு ஒன்றை பிரான்ஸின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நாட்டின் தெற்குக்கரை நகரமான மார்செய்யில் இது நடந்திருக்கிறது.

ரஷ்ய அரசு எரிபொருள் கம்பனியான ரொஸ்நெஃப்ட்டின்(Rosneft)உரிமையாளருக்குச் சொந்தமான “உண்மைக் காதல்”(“true love”) என்னும் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொகுசுப் படகே கைப்பற்றப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

உலகெங்கும் ரஷ்யச் செல்வந்தர்கள்மற்றும் முக்கிய பிரபலங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யநிதி மற்றும் நிறுவனங்கள் பலவற்றுக்கு எதிராகத் தடைகளை விதித்திருப்பது தெரிந்ததே. தடைக்கு இலக்கான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிபர் புடினுக்கு நெருக்கமான – அதிகாரச் செல்வாக்கு மிகுந்த-பெரும் புள்ளிகளுடையவையாகும். அவர்களில் பலர் மேற்கு நாடுகளில் தங்கள் சொகுசு பங்களாக்களையும் பெரும் சொத்துக்களையும் வைத்திருக்கின்றனர். அவர்களே தற்சமயம் ரஷ்யா மீதான தடைச் சட்டங்களுக்குள் சிக்கிருக்கின்றனர். பலருடைய கடன் அட்டைகள், வங்கிக் கணக்குகள் கூட முடக்கப்பட்டு வருகின்றன.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப்பின்னர் கிரெம்ளினின் அதிகாரச் செல்வாக்குக்கு உட்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் வர்த்தக நடவடிக்கைகளைத் தங்கள் சுய லாபம் கருதி விரிவுபடுத்தி வருகின்றனர். அத்தகைய பிரபல வர்த்தகப் புள்ளிகளை மேற்குலக ஊடகங்கள் “oligarch”என்று அழைக்கின்றன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

ஹங்கேரி நாட்டு நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலம்

Thanksha Kunarasa

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

namathufm

காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment