யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா படைபெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ரஷ்ய மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
முன்பு நடைபெற்ற போராட்டங்களில், போலீசார், கலவர தடுப்பு அதிகாரிகள் ஆகியோர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
மேலும், அதிகளவான மக்களை கைது செய்தனர். கடந்த சில தினங்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நவால்னி ராணுவத் தாக்குதலுக்கு எதிராக தினசரி பேரணிகளுக்கு அழைப்பு விடுத்ததால், புதிய எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.
‘பயமுறுத்தும் கோழைகளின் தேசமாக’ ரஷ்யா இருக்கக்கூடாது என அவர் முன்னதாக கூறியிருந்தார்.