உலகம் செய்திகள்

ரஷ்ய – உக்ரைன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு வீசி தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது, ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ரஷ்யாவால் சாத்தியமான போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்; இரசாயன உரத்தடைக்கான நேரம் இதுவல்ல- பிரதமர்.

namathufm

IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

Thanksha Kunarasa

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Thanksha Kunarasa

Leave a Comment