பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பண்டாரவளை ஹப்புத்தளை பிரதான வீதியில் அம்பத்தன்ன வத்த சந்தியில் இன்று மதியம் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. வெலிமடை பகுதியில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த கார் குறித்த பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த 30 வயதான இளைஞர் ஒருவரை பிரதேச மக்கள் மீட்டு தியத்தலாவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறு காயங்களுடன் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து குறித்த விசாரணைகளை பண்டாரவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – ராமு தனராஜா