உலகம் செய்திகள்

சரிவைச் சந்தித்துள்ள ஆசிய பங்கு விலைகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, உக்ரைனில் உள்ள ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஆசியாவில் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்துள்ளன.

டோக்கியோ மற்றும் ஹோங்காங் பங்குச் சந்தைகள் மிகுந்த வீழ்ச்சியை எதிர்கொண்டன.

ஜப்பானின் முக்கியக் குறியீடான நிக்கேய் 2.5 வீதம் குறைந்தது. ஹோங்காங்கில் ஹாங் செங் 2.6 வீதம் குறைந்தது.

காலை வணிகத்தின் போது, ஆசியாவில் எண்ணெய் விலை உயர்ந்தது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 112 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.

ரஷ்ய படைகள் அணுமின் நிலையத்தின் மீது ஷெல் குண்டு வீசியதைத் தொடர்ந்து இந்தத் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மின்வெட்டு – அட்டவணை

namathufm

புடின் – மோடி திடீர் பேச்சுவார்த்தை

Thanksha Kunarasa

உக்ரேன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்; ஐரோப்பிய நாடுகள் பரபரப்பு .

Thanksha Kunarasa

Leave a Comment