உலகம் செய்திகள்

உக்ரைய்ன் அணுமின் ஆலை தீப்பரவல்

தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள போதிலும் அதன் மீது தொடர்ந்தும் ரஸ்ய படையினரின் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்; தீயணைப்பு வீரர்களால் இன்னும் தீயை அணைக்க முடியவில்லை என்று ஆலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

சர்வதேச அணுசக்தி அமைப்பின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், நிலைமை குறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அணுசக்தி பாதுகாப்பு நிபுணரான கிரஹாம் எலிசனின் கருத்துப்படி, தீப்பரவல் தொடர்ந்தால் அணுஉலை உருகக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 1986 ஆம் ஆண்டு செர்னோபில் பேரழிவைப் போலவே பல ஆண்டுகளாக பிராந்தியத்தி;ல் உள்ள பகுதிகளில் கதிரியக்க தாக்கம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

சுற்றியுள்ள பகுதியில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக ரஸ்ய படைகள் ஆலையின் இயக்கத்தை முடக்க முயற்சிக்கக்கூடும் என்று எலிசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

Thanksha Kunarasa

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி

Thanksha Kunarasa

மேலுமிருவரை எரிபொருள் கொன்றது

Thanksha Kunarasa

Leave a Comment