இலங்கை செய்திகள்

இலங்கையில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்.

அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில, மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 47|2 பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து நேற்று மாலை நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்ச, கைத்தொழில் அமைச்சராகவும் உதய கம்மன்பில, வலுசக்தி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தனர்.

இந்நிலையிலிலேயே அவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சக்தி அமைச்சராக, பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கிரிமியா இணைப்பு நினைவாக மொஸ்கோவில் பிரமாண்ட விழா! ஸ்ரேடியத்தில் நடந்த நிகழ்வில் புடினின் உரை இடையில் தடை!

namathufm

நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்

Thanksha Kunarasa

ICTA தலைவர் பதவி விலகினார்

Thanksha Kunarasa

Leave a Comment