சினிமா செய்திகள்

ஷாருக்கான் மகன் கைது தொடர்பில் புதிய தகவல்

ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த வருடம் அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாத சிறைத் தண்டனைக்கு பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்யன் கான் வழக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது.

இவ்விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

அதன்படி, ஆர்யன் கான் போதைப் பொருள் தொடர்பாக பெரிய அளவில் எந்தவிதமான சதியிலும் ஈடுபடவில்லை என்றும், அவருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆர்யன் கானை கைது செய்ததிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கானிடம் நடைபெற்ற சோதனையில், வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும், ஆனால் வீடியோ எடுக்கப்படவில்லை.

மேலும், ஆர்யன் கானிடம் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்படவில்லை. அதனால் அவரது போனை பறிமுதல் செய்து சோதனை செய்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

6 கிலோ தங்கத்தை பேருந்தில் எடுத்துச் சென்ற நபர்  கைது !

namathufm

உக்ரைன் தேசிய நிறங்களில் ஒளிர்கின்றது ஈபிள் கோபுரம் !

namathufm

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே தாக்குதலை நிறுத்துவோம்’ – புதின்

Thanksha Kunarasa

Leave a Comment