உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Grévin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.
ரஷ்யா, சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது போர் தொடுத்துவருவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் பொருளாதரா தடை உட்பட பலவகையான தடைகளை ரஷ்யா மீது தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உள்ள Grévin அருங்காட்சியகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் சீன ஜனாதிபதி ஜிங்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது போர் தொடுத்துவருவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.