மகளிர் பிக் பாஷ் ரி 20 போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இந்தியத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவே மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட வேண்டும் என்று பிரபல அவுஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி கடந்த வருடம் பேட்டியளித்தார்.
இதையடுத்து 2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில், அடுத்த வருடம் முதல் பாகிஸ்தானில் மகளிர் பி.எஸ்.எல். போட்டி தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா அளித்துள்ளதாக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டின் தலைமை அதிகாரியான தானியா மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்த வருடமே இப்போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.