உலகம் செய்திகள்

பொருளாதாரத்துக்கு தாக்கம்! வாழ்க்கைச் செலவு நெருக்கடி – அதிபர் மக்ரோன்

பொருளாதாரத்துக்கு தாக்கம் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மக்கள் எதிர்கொள்ள நேரிடும் அதிபர் மக்ரோன் நாட்டுக்கு உரை ரஷ்யாவுடன் எமக்குப் போரில்லை யுத்தத்தை புடினே தேர்ந்தெடுத்தார்! முடிந்தவரை அவரோடு பேசுவோம்!

பிரான்ஸின் அதிபர் தேர்தலைஉக்ரைன் நெருக்கடி பாதிக்காது!பிரான்ஸ் ரஷ்யாவுடன் போர் தொடுக்கவில்லை. இது நேட்டோக்கும் மொஸ்கோவுக்குமான போரும் அல்ல. யுத்தத்தைப் புடினே தேர்ந்தெடுத்திருக்கிறார்.ஆயுதத்தைக் கைவிட்டுச் சமாதானப்படுத்துவதற்காக அவருடன் தொடர்பைத் தொடர்ந்து பேணுவது எனது தெரிவாக உள்ளது. பிரான்ஸின் அதிபர் மக்ரோன் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் போரைத் தனது அரசு கையாள்கின்ற விதம் குறித்து அந்த உரையில் அவர் விளக்கமளித்திருக்திருக்கிறார்.உரையின் முக்கிய உள்ளடக்கம் வருமாறு :பிரான்ஸ் உக்ரைனின் பக்கம் நிற்கிறது. உக்ரைன் மக்களது துணிவுக்கும் உறுதிப்பாட்டுக்கும் மரியாதை செலுத்துகிறேன். மோல்டோவா, போலந்து, ஹங்கேரி வழியாக பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தனக்குரிய பங்கினரை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும். இந்தப் போரினால் பிரான்ஸின் பொருளாதார வளர்ச்சி தவிர்க்க முடியாதபடி பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து வரும் பொருள்கள் தடைப்படுதல் , அவ்விரு நாடுகளுக்குமான பிரான்ஸின் ஏற்றுமதிகள் தடை என்பன காரணமாக நமது விவசாயம், கைத்தொழில் துறைகள் பாதிப்பைச் சந்திக்கும். எரிபொருள், மற்றும் வெப்பமூட்டும் செலவுகள் மேலும் அதிகரிக்கலாம்.அதனால் மக்கள் பெரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஐரோப்பா புதிய சகாப்தம் ஒன்றினுள் பிரவேசித்திருக்கிறது. அது இனி மேலும் அதன் பாதுகாப்புக்கும் எரிசக்தித் தேவைகளுக்கும் வெளியே தங்கியிருக்க முடியாது. எரிபொருள் நெருக்கடி, பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான ஐரோப்பிய மட்ட மாநாடு ஒன்று மார்ச் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் பாரிஸ் Versailles இல் கூட்டப்படுகிறது.

நாட்டின் ஐனநாயக வழி முறையிலான தேர்தலும் அதற்கான பிரசார நடவடிக்கைகளும் உரிய விதத்தில் நடைபெறும். உக்ரைன் போர் நிலைமை அதில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தாது இத்தகவல்களை மக்ரோன் உரையில் வெளியிட்டார். அதிபர் மக்ரோன் தேர்தலில் போட்டியிடுவதை இன்னமும் முறைப்படி அறிவிக்கவில்லை. அதற்கான காலக்கெடு இந்த வாரம் நிறைவடைய உள்ளது. அதேசமயம் மார்செய் நகரில் சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்த அவரது முதலாவது பிரசாரக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு!

Thanksha Kunarasa

இலங்கை உதைபந்தாட்ட வீரர் மாலைத்தீவில் உயிரிழப்பு.

Thanksha Kunarasa

பொரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!!

Thanksha Kunarasa

Leave a Comment