உலகம் செய்திகள்

உக்ரைனிடம் சரணடையும் ரஸ்ய துருப்புக்கள்

உக்ரைன் – ரஷ்யப் போர் இன்றுடன் 7வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் பல ரஸ்ய வீரர்கள் மனக்குழப்பமடைந்துள்ளதாகவும் தண்ணீர், உணவின்றி உக்ரைனில் கூட்டமாகச் சரணடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் மனக்குழப்பத்திலும், சோர்வடைந்தும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கும் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Related posts

இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிக்கை …!

namathufm

எரிவாயு விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்

Thanksha Kunarasa

Leave a Comment