தமக்கான கடன் பத்திரத்தை வங்கிகள் வெளியிடாமையினால், உரிய வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக, லிட்ரோ ம்றறும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அடங்கிய மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும், வங்கிகள் கடன் பத்திரத்தை வெளியிடாமையினால், எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லாஃப் எரிவாயு விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.
எரிவாயுவை நாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய தெரிவிக்கின்றார். லாஃப் எரிவாயு சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.