பெற்றோல் மற்றும் டீசலிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.
நாட்டில் ஏற்பட்ட கோவிட் சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்கு கூட பயணிப்பதத்திற்கு எரிபொருள் இல்லாமல் பெரும் அவதியுறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் பெருமளவான மக்கள் எரிபொருள் கொள்வனவுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியமையை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும் நேற்று கட்டணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 37,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் சுப்பர் டீசல் என்பன முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலையில் தற்போது களஞ்சியப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.