இலங்கை செய்திகள்

மார்ச் 05 முதல் மின்வெட்டு இடம்பெறாது; சிறிலங்கா அரச அதிபர்.

நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு…தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தப் பணிப்புரையை சிறிலங்கா அரச அதிபர் கோட்டபாயா தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் – தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் – மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம் பெறாது என அதிகாரிகள் குறிப்பிட்டனர். நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம் பெறும்.எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், பொதுமக்களிடம் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரதமர், மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதி செயலாளர், ஜனாதிபதி தலைமை ஆலோசகர், துறைசார் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் பலி!

Thanksha Kunarasa

ஜாக் சிராக்கிற்குப் பின்னர் – – – – – இரண்டாவது முறையும் தெரிவாகும் பிரெஞ்சு அதிபராகிறார் மக்ரோன்?

namathufm

மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்; இரசாயன உரத்தடைக்கான நேரம் இதுவல்ல- பிரதமர்.

namathufm

Leave a Comment