உலகம் செய்திகள்

செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்!

உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவில் அதன் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகள் மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் குறித்து ‘ஆழ்ந்த கவலை’ இருப்பதாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டில் ‘அனைத்து தயாரிப்பு விற்பனையையும் இடைநிறுத்தியுள்ளது’ என்றும் ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்குள் ஆப்பிள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கான அனுமதி, நாட்டிற்கு வெளியே ரஷ்ய அரசு ஊடகங்களின் பயன்பாடுகள் கிடைப்பதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆப்பிள் கூறியுள்ளது.

கடந்த வாரம், நாட்டில் எங்கள் விற்பனை சேனலுக்கான அனைத்து ஏற்றுமதிகளையும் நாங்கள் நிறுத்திவிட்டோம். ஆப்பிள் பே மற்றும் பிற சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆர்டி செய்தி மற்றும் ஸ்புட்னிக் செய்தி இனி ரஷ்யாவிற்கு வெளியே உள்ள ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது’ என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ரைனில் உள்ள ஆப்பிள் வரைபடத்தில், போக்குவரத்து மற்றும் நேரலை சம்பவங்களை நாங்கள் முடக்கி வைத்துள்ளோம்.

ரஷ்யாவிற்கு எதிராக செயல்படுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் ஆப்பிள் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோருக்கான அனுமதியை ‘தடை’ செய்யுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் உக்ரைன் அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ்.

உக்ரைன் அரசு கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்திடம் ரஷ்யாவில் அதன் ஆப் ஸ்டோர் அனுமதியை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் சில பாதுகாப்பு மற்றும் வல்லுநர்கள் இது மேற்கத்திய கருவிகளை நம்பியிருக்கும் ரஷ்ய பயனாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில், நெட்ஃபிக்ஸ், பேஸ்புக், யுடியூப் மற்றும் ட்விட்டர் அனைத்தும் ரஷ்ய சார்ந்த பிரசாரத்திற்கு எதிராக செயல்படுமாறு ஐரோப்பிய அதிகாரிகள் தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தை அடுத்து, ரஷ்ய ஊடகங்களால் பகிரப்பட்ட தகவல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நாட்டில் ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப மறுப்பதாகவும் நெட்ஃபிக்ஸ் கூறியது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனங்கள் விளம்பரம் செய்யவும், வருமானம் ஈட்டவும் தடை செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ரஷ்ய அரசு செய்தி தளம் பதிவிடும் அனைத்து பதிவுகளும் எச்சரிக்கை பதிவுகள் உடன்தான் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் என தெரிவித்தது.

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம், கூகுள் தளத்தின் மூலம் வருமானம் ஈட்டும் வழிகள் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து உரிய முடிவுகளை எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.

கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான யுடியூப், ரஷிய அரசின் செய்தி நிறுவனத்தின் அனைத்து சேனல்களிலும் வருமானம் ஈட்டும் வழியை முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

ட்விட்டர் தனிநபர் தகவல்களை எப்படிப் பாதுகாப்பது, கணக்குகளுக்கு எப்படிச் சிறப்பான கடவுச்சொல் அளிப்பது, சைபர் தாக்குதலில் இருந்து எப்படிக் காத்துக்கொள்வது குறித்த வழிமுறைகளை தனது ட்விட்டர் பாதுகாப்பு கணக்கில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை

Thanksha Kunarasa

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் – இரண்டு மாதங்களில் உயிரிழப்பு!

namathufm

முல்லைத்தீவு சிகை அலங்கார சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு.

namathufm

Leave a Comment