ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அவர் தனது உரையில் ‘எங்கள் நாட்டில் நடப்பது துயரம். யுக்ரேனியர்கள் தங்கள் நிலத்திற்காகவும், தங்களின் சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள்,
யாரும் எங்களை பிரிக்க முடியாது, மன உறுதியை குலைக்க முடியாது, ஏனென்றால் நாங்கள் உக்ரேனியர்கள்’ என்றார் ஸெலென்ஸ்கி.
மேலும் அவர், யுக்ரேனிய குழந்தைகளை ரஷ்யா இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், நேற்று வரை 16 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
‘நீங்கள் எங்களுடன் துணை இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கவும்’, உக்ரேனை அவர்களால் வீழ்த்த முடியாது என்பதையும், நாங்கள் ‘உண்மையான ஐரோப்பியர்கள்’ என்பதையும் நிரூபியுங்கள் என்று அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து கைதட்டினார்கள்.