உலகம் செய்திகள்

உக்ரைன்- ரஸ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் உக்ரைன் – பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றிருந்தது.

இருந்த போதும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் அன்றைய பேச்சுவார்த்தை நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் மீளவும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

எவ்வாறிருப்பினும், தொடர்ந்தும் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் கார்க்கிவ் நகர் மீது ரஷ்யா நேற்று இரண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் நாளைய தினமும் மின்வெட்டு!

Thanksha Kunarasa

20,000 ஆப்கானியர்களை மீளமீள்குடியமர்த்தும் புதிய திட்டம் அறிவிப்பு!

editor

உக்ரைய்ன் அணுமின் ஆலை தீப்பரவல்

Thanksha Kunarasa

Leave a Comment