இலங்கை செய்திகள்

இலங்கை மக்களிடம் கோரிக்கை

இலங்கையில் ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்குகளை அணைத்தால் நாளொன்றுக்கு 200 மெகா வோட் மின்சாரம் சேமிக்க முடியும் என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இந்த நடவடிக்கையை மேற்கொண்டால், 200 மெகா வோட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வற்றி வருவதனால் நீர் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் காரணமாக நீர்மின் உற்பத்திக்கு தண்ணீர் வழங்குவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான வறண்ட வானிலையால் தினசரி மின் தேவை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்ககூடும்.

இதனால் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு மின்சார சபை பொறியியலாளர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சென்னை மாநகராட்சி மேயராக திமுக நிர்வாகியான பிரியா ராஜன் !

namathufm

மனித இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்! விஞ்ஞானிகள் தகவல்

Thanksha Kunarasa

இலங்கையில் கணக்கில் கொள்ளப்படாத ஆபத்தான நோய்!

Thanksha Kunarasa

Leave a Comment