செய்திகள் விளையாட்டு

ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்குத் தடை

சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாக வாரியம் பரிந்துரைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 6 வது நாளாக, தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கும் பெலாரஸ் மீது நடவடிக்கைளை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு ரஷ்யா அல்லது பெலாரஸ் நாட்டிலிருந்து விளையாட்டு வீரர், அல்லது விளையாட்டு அதிகாரிகள் எவரும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டுப் பிரதிநிகளாகப் பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது. ரஷ்யா அல்லது பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த தனி நபரோ அல்லது அணியோ, அவர்களை நாடற்ற வீரர் அல்லது நாடற்ற அணியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய சின்னமோ, நிறமோ, கொடியோ, அல்லது கீதமோ காட்சிப்படுத்தக் கூடாது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் இன்றும் ஆர்ப்பாட்டம்

Thanksha Kunarasa

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Thanksha Kunarasa

சிறிலங்கா அதிபருடன் பெரமுன கட்சி கூட்டம் – குழப்பம்

namathufm

Leave a Comment