இலங்கை செய்திகள்

விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவன் நான் – மைத்திரி

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில் கலந்துரையாட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டையே கையளித்ததாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் உணவு உண்ணவும், விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடவும் முடிந்தது என்று தெரிவித்த அவர், சில பிரச்சினைகள் இருந்தபோதிலும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றார்.

அரசாங்கத்தை குறை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும், நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதற்கு இந்தத் தருணமே பொருத்தமானது என சுட்டிக்காட்டினார்.

54 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் தான், விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவர் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

உலகின் மிகப் பெரிய “அன்ரனோவ்” ரஷ்யாவின் தாக்குதலில் அழிந்தது!

namathufm

ரம்புக்கனை சம்பவம்: B அறிக்கையிலுள்ள விடயங்களை மாற்றியமைக்காக மன்றில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி

Thanksha Kunarasa

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

Thanksha Kunarasa

Leave a Comment