முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, பேரக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது பதிவில், ‘இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.