சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான தூதுக்குவினர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.
சிறிலங்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள உமர் பாரூக் புர்கி (Umar Farooq Burki) கடந்த 22 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த வருடம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருத்தரப்பு ஒத்துழைப்புகளை முன்னெடுத்துச் செல்வாதற்கான சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதுடன் அவர் பாகிஸ்தான இராணுவத்தில் மேஜர் ஜெனரல் தர பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது