ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையிலேயே அதன் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் இந்த செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.